Important Announcement from the Department of Examinations Regarding the Advanced Level Examination!

உயர்தரப் பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
உயர்தரப் பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

(READ FULLY இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ FULLY இனை CLICK செய்யவும்!)

நாளை (10) ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை, டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 2,362 பரீட்சை மத்திய நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பரீட்சைக்கு 246,521 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 94,000 தனியார் பரீட்சார்த்திகள் என மொத்தம் 340,521 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர்.

தற்போது வரை அனுமதி அட்டையைப் பெறாத விண்ணப்பதாரி என்ன செய்வது?

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர் ஒருவர் அனுமதி அட்டையைப் பெறவில்லை என்றால், திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று அதனைப் பதிவிறக்கம் செய்யலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே கூறுகிறார்.

ADMISSION DOWNLOAD

நிலையத்திற்குச் சமூகமளிக்க வெண்டிய நேரம் என்ன?

மேலும் காலை 8:30க்கு பரீட்சை ஆரம்பிக்கும் என்பதால், மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, பரீட்சை நிலையத்திற்குச் சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் எத்தனை மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும்?

அத்துடன் சாதாரண நாட்களில் மதியம் 1 மணிக்கு பரீட்சை தொடங்கும் எனவும், வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் மதியம் 2:00 மணிக்கு ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்டுள்ள உபகரணங்கள்

மின்னணு கடிகாரங்கள், பிற மின்னணு உபகரணங்கள் மற்றும் கைபேசிகள் ஆகியவற்றைப் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் பரீட்சை மோசடிகளில் ஈடுபடாமல், கவனத்துடன் பரீட்சைக்குத் தோற்றுமாறு பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்துகிறது.

FOLLOW OUR WHATSAPP CHANNEL
FOLLOW TEC INFO
Follow on Facebook

Comments

Popular posts from this blog

பல்கலைக்கழக அனுமதி 2024/2025 - காத்திருப்பு அடிப்படையில் உள்ளீர்ப்பு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிடுவதற்கான வழிமுறைகள்!

2024 A/L EXAM CUT OFF MARKS – 2024/2025