Muslims school's holidays changed?

முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை மாற்றம்

முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை தினங்களில் மாற்றம்; வெளியான அறிவிப்பு!

முதலாம் தவணை இன்றுடன் முடிவடைந்து 28ஆம் திகதி 2ஆம் தவனை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு இணங்க 26,27 ஆம் திகதிகள் சகல பாடசாலைகளுக்குமான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)

எனினும், முஸ்லிம் பாடசாலைக்கான விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரிய அறிவிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்து உள்ளார்.

இதன்படி ஹஜ் பெருநாளுக்கு முந்திய தினமான 6ஆம் திகதியும் (அரபா தினம்), 9ஆம் திகதியும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

26, 27 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகள் வழமைப்போல நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பல்கலைக்கழக அனுமதி 2024/2025 - காத்திருப்பு அடிப்படையில் உள்ளீர்ப்பு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிடுவதற்கான வழிமுறைகள்!

2024 A/L EXAM CUT OFF MARKS – 2024/2025