மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மேலும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை!
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மேலும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை!
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)
இதன்படி, குறித்த விடுமுறை நாளை மறுதினம் (27.02.2025) வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் பி.ஏ.சி.பி பமுனுஆராச்சி கையொப்பமிட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
முன்னதாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
குறித்த விடுமுறையை முன்னிட்டு மார்ச் 01 ஆம் திகதி பாடசாலைகள் நடைபெறும்.
நாளை (26) மகா சிவராத்திரி கொண்டாடப்படுவதால் நாளை மறுநாள் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பது கருத்திற்கொள்ளப்பட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment