சிவராத்திரிக்கு மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதால் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும்; மீள் பரிசீலனை செய்ய வேண்டுகோள்!

சிவராத்திரிக்கு மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதால் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும்; மீள் பரிசீலனை செய்ய வேண்டுகோள்!

சிவராத்திரிக்கு மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதால் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும்; மீள் பரிசீலனை செய்ய வேண்டுகோள்!

சிவராத்திரிக்கு மறுநாள் 27ம் திகதி விடுமுறை வழங்கப்படுவது முதன்நாள் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும். இது சிவராத்திரி விரத அனுட்டான விதிக்கு முற்றிலும் முறனானதாகும் என சிவஶ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.

(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)

வடமாகாண பாடசாலைகளுக்கு சிவராத்திரிக்கு மறுநாள் 27 ஆம் திகதி விடுமுறை என வடமாகாண ஆளுநர் அறிவித்தல் விடுத்துள்ள நிலையில், சிவஶ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு 27ம் திகதி வியாழக்கிழமை இலங்கை வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

எனினும் மஹாசிவராத்திரி விரதம் 26 புதன்கிழமை என்பதால் மாணவர்கள் அன்றைய தினமே சிவாலய வழிபாடு செய்யவது உத்தமமாகும் என்பதுடன் அதுவே சரியான முன்னுதாரணமாகும்.

27 ஆம் திகதி சிவராத்திரி மறுநாள் விடுமுறை வழங்கப்படுவது முதன்நாள் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும். இது சிவராத்திரி விரத அனுட்டான விதிக்கு முற்றிலும் முறனானதாகும்.

பொதுவாக சிவராத்திரியன்று காலை முதல் விரதம் நோற்று விழித்திருந்து, பசித்திருந்து, தனித்திருந்து மறு நாள் சூரிய அஸ்தமனத்தின் பின்பே உறங்கவேண்டும் என்பது விரத நியதியாகும்.

இவ் விடயத்தை மீள் பரிசீலனை செய்து 26 ஆம் திகதி விடுமுறை வழங்க வேண்டுமென வேண்டுகோள் ஒன்றை வட மாகாண ஆளுநருக்கு முன் வைத்துள்ளோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பல்கலைக்கழக அனுமதி 2024/2025 - காத்திருப்பு அடிப்படையில் உள்ளீர்ப்பு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிடுவதற்கான வழிமுறைகள்!

2024 A/L EXAM CUT OFF MARKS – 2024/2025