24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்களம்!
24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்களம்!
குடிவரவு - குடியகல்வு திணைக்கள பிரதான அலுவலகத்தை 24 மணித்தியாலங்களும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)
செவ்வாய்க்கிழமை (18) இரவு முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இனிவரும் நாட்களில் நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை முதல் பத்தரமுல்லை வரையில் இலங்கை போக்குவரத்து சபையின் இரவு நேர பஸ் சேவையை இன்று புதன்கிழமை (19) முதல் முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடவுச்சீட்டுக்கான அவசர தேவை கொண்டவர்கள் மாத்திரம் அலுவலகத்துக்கு வருகைதந்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறும், தற்போது போதுமான கடவுச்சீட்டுக்கள் கையிருப்பில் உள்ளதால் வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படாதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் குடிவரவு - குடியகல்வு திணைக்கள அலுவலகம் ஒன்றை புதிதாக திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment