Used Cars Can Be Imported from Japan at Lower Prices: Vehicle Importers Association Optimistic!
ஜப்பானில் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் இறக்குமதி செய்யலாம்; வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை!
கார் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுமாயின் ஜப்பானில் 3 வருடங்கள் பயன்படுத்திய உரிய தரத்தில் உள்ள வாகனங்களைக் குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஜகத் ராமநாயக்க இதனைத் தெரிவித்தார்.
4 வர்க்க வாகனங்களை இறக்குமதி செய்ய அண்மையில் அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. தனியார் வாகன இறக்குமதியாளர்களுக்கான அனுமதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை.
அதற்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அதற்கான அனுமதி கிடைக்கப் பெறும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஜகத் ராமநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நவீன ரக வாகனங்கள் மற்றும் விலைகள்(வரி சேர்க்கப்படாத விலைகள்)
- டொயோட்டா கொரோல்லோ க்ரோஸ்: வரியின்றி ரூ. 55 - 60 இலட்சம்
- ஹொன்டா வெசல்: ரூ. 60 - 65 இலட்சம்
- சுசுகி வெகன் ஆர்: ரூ. 35 இலட்சம்
- டொயோட்டா யாரிஸ்: ரூ. 27 - 30 இலட்சம்
இந்த வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி கிடைத்தால் குறைந்த விலையில் நாட்டிற்கு கொண்டுவர முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment