Thailand Legalizes Same-Sex Marriage - Law Comes Into Effect
தாய்லாந்தில் தன்பாலின திருமண சட்டம் இன்று முதல் அமுலில்!
தாய்லாந்தில் தன்பாலின திருமணத்தை அனுமதிக்கும் சட்டம் இன்று முதல் அமுலாகியுள்ளது.
(READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!)
இந்தநிலையில், பல தன்பாலின தம்பதிகள் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிற இடங்களில் திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பேங்கொக்கில் சுமார் 311 தன்பாலிய ஜோடிகள் இன்று தங்களது திருமண பதிவுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும், இன்றைய நாளில் குறைந்தது 1,448 தன்பாலின ஜோடிகள் திருமணம் செய்து கொள்வார்கள் என தன்பாலின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தன்பாலின தம்பதிகள் தற்போது ஏனைய தம்பதிகளைப் போலவே சொத்துக்களை நிர்வகிக்கவும், மரபுரிமை பெறவும், குழந்தைகளை தத்தெடுக்கவும், தங்கள் துணையின் மருத்துவ சிகிச்சையைப் பற்றி முடிவுகளை எடுக்கவும் உரிமை பெற்றுள்ளனர்.
எனினும், பல சட்டங்கள் இன்னும் பாலின-நடுநிலையில் இல்லாததால், தாங்கள் மேலும் பல மாற்றங்களுக்காகப் போராடுவதாக தாய்லாந்தின் தன்பாலின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Comments
Post a Comment