வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வதுடன் நாளை மறுதினமளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இலங்கைக்கு அப்பால் தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்.
இதேவேளை இந்த நிலைமையுடன் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலையும் படிப்படியாக ஆரம்பிக்கின்றது.
ஆனபடியினால் வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதுடன் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
பல்கலைக்கழக அனுமதி 2024/2025 - காத்திருப்பு அடிப்படையில் உள்ளீர்ப்பு பல்கலைக்கழக அனுமதி 2024/2025 - காத்திருப்பு அடிப்படையில் உள்ளீர்ப்பு பல்கலைக்கழக அனுமதிக்கான காத்திருப்புப் பட்டியல் வெளியாகியுள்ளது. Closing Date - update soon (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More எனவே, பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தமது விண்ணப்ப தளத்தை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். Check Waiting List(INDEX NUMBER) Check Waiting List
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிடுவதற்கான வழிமுறைகள்! உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிடுவதற்கான வழிமுறைகள். (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை கீழே உள்ள Check Results இனைக் கிளிக் செய்து இணையவழியாக பார்வையிடலாம். CHECK RESULTS இணையவழியாக பார்வையிடுவதில் சிரமம் ஏற்பட்டால், குறுஞ்செய்தி (SMS) மூலம் பெறுபேறுகளை பார்வையிடலாம்: Mobitel: EXAMS <index number> என தட்டச்சிட்டு 8884 என்ற எண்ணுக்கு அனுப்பவும் Dialog: EXAMS <index number> என தட்டச்சிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பவும் Hutch: EXAMS <index number> என தட்டச்சிட்டு 8888 என்ற எண்ணுக்கு அனுப்பவும் அனைத்து நெட்வொர்க்குகளுக்குமான பொதுவான முறை: ...
2024 A/L EXAM CUT OFF MARKS – 2024/2025 2024 A/L EXAM CUT OFF MARKS RELEASED FOR ACADEMIC YEAR 2024/2025 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z-புள்ளி இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 06.00 மணிக்கு பின்னர் Z-புள்ளி வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS கீழே உள்ள CHECK UNIVERSITY CUT-OFF பொத்தானை அழுத்தி உங்கள் Z-Score வெட்டுப் புள்ளிகளைப் பார்வையிடலாம். (Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் CLICK செய்யவும்!) CHECK UNIVERSITY Selection[INDEX NUMBER] CHECK UNIVERSITY CUT-OFF சர்வர் பிஸியாக இருந்தால், தயவுசெய்து சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்யுங்கள். இணையவழியாக பார...
Comments
Post a Comment