சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை எவ்வாறு கண்டறிவது?
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை எவ்வாறு கண்டறிவது?
சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை எவ்வாறு கண்டறிவது?
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 கார்கள் நாடு முழுவதிலும் பயன்பாட்டில் இருப்பது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
(READ MORE இனை Click செய்யும் போது
வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால்,
BACK வந்து,
மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!)
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய சுங்க வரியை செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த வாகனங்களில் அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறான வாகனங்கள் விசாரணைக்காக ஆணைக்குழுவினால் கையகப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைக்காகவும் சுங்க வரிகள் மற்றும் பிற கட்டணங்களை வசூலிப்பதற்காகவும் இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த வாகனங்களின் இரண்டாவது அல்லது அடுத்தடுத்த உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களையும், இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதையும் அவதானிக்க முடிந்தது.
அதன்படி, இவற்றிற்கு ஒரு தீர்வாக வாகனத்தை கொள்வனவு செய்யும் நபர் வாகனத்தை வாங்குவதற்கு முன்னர், இறக்குமதி வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் முறையாக செலுத்தப்பட்டதா என்பதை சரிபார்க்க, பொருத்தமான இணையவழி அணுகலை எளிதாக்குவதற்கு ஆணைக்குழு இலங்கை சுங்கத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
அதன் பிரதிபலிப்பாக சுங்கத்துறை இணைய தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதுடன் இதன் ஊடாக ஒருவர் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வாகனம் சட்டபூர்வமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு சுங்க வரிகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதை சோதித்து பார்க்கும் சந்தர்ப்பம் காணப்படுகிறது.
அதன்படி, மேலே தரப்பட்டுள்ள "CHECK VEHICLE" எனும் இணைப்பைப் பார்வையிடுவதன் மூலம் உங்களுக்குச் சொந்தமான வாகனம் அல்லது வாங்க எதிர்பார்க்கப்படும் வாகனம் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியுமென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அனுமதி 2024/2025 - காத்திருப்பு அடிப்படையில் உள்ளீர்ப்பு பல்கலைக்கழக அனுமதி 2024/2025 - காத்திருப்பு அடிப்படையில் உள்ளீர்ப்பு பல்கலைக்கழக அனுமதிக்கான காத்திருப்புப் பட்டியல் வெளியாகியுள்ளது. Closing Date - update soon (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More எனவே, பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தமது விண்ணப்ப தளத்தை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். Check Waiting List(INDEX NUMBER) Check Waiting List
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிடுவதற்கான வழிமுறைகள்! உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிடுவதற்கான வழிமுறைகள். (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை கீழே உள்ள Check Results இனைக் கிளிக் செய்து இணையவழியாக பார்வையிடலாம். CHECK RESULTS இணையவழியாக பார்வையிடுவதில் சிரமம் ஏற்பட்டால், குறுஞ்செய்தி (SMS) மூலம் பெறுபேறுகளை பார்வையிடலாம்: Mobitel: EXAMS <index number> என தட்டச்சிட்டு 8884 என்ற எண்ணுக்கு அனுப்பவும் Dialog: EXAMS <index number> என தட்டச்சிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பவும் Hutch: EXAMS <index number> என தட்டச்சிட்டு 8888 என்ற எண்ணுக்கு அனுப்பவும் அனைத்து நெட்வொர்க்குகளுக்குமான பொதுவான முறை: ...
2024 A/L EXAM CUT OFF MARKS – 2024/2025 2024 A/L EXAM CUT OFF MARKS RELEASED FOR ACADEMIC YEAR 2024/2025 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z-புள்ளி இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 06.00 மணிக்கு பின்னர் Z-புள்ளி வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS கீழே உள்ள CHECK UNIVERSITY CUT-OFF பொத்தானை அழுத்தி உங்கள் Z-Score வெட்டுப் புள்ளிகளைப் பார்வையிடலாம். (Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் CLICK செய்யவும்!) CHECK UNIVERSITY Selection[INDEX NUMBER] CHECK UNIVERSITY CUT-OFF சர்வர் பிஸியாக இருந்தால், தயவுசெய்து சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்யுங்கள். இணையவழியாக பார...
Comments
Post a Comment