Posts

Showing posts from March, 2025

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் என வெளிவந்த செய்தி போலியானதா?

Image
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் என வெளிவந்த செய்தி போலியானதா? - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு! நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடுவது குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS அதன்படி, உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்தி போலியானது என திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, பரீட்சை முடிவுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் தவறான செய்திகளைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. உயர்தரப் பரீட்சை பெறு...

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது?

Image
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS முடிவுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை டிசம்பர் 20 ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக பிற்போடப்பட்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Image
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு! அரச உத்தியோகத்தர்களுக்கான இவ்வருட வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் சம்பள அதிகரிப்பு கொடுப்பனவுகளை ஏப்ரல் மாதம் முதல் வழங்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. அதன்படி, (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு வழங்கப்படும் போது மேற்படி அதிகரிக்கப்பட்ட சம்பளத்தினை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, மார்ச் 21 ஆம் திகதி 2025 வரவு செலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வாரத்தின் பின்னர், அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பெப்ரவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நிதி, திட்டமிடல் ம...

சாதாரண தர விஞ்ஞான வினாத்தாள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Image
சாதாரண தர விஞ்ஞான வினாத்தாள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு! கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS இந்த விடயம் தொடர்பில் தெளிவூட்டும் வகையில் கல்வியமைச்சின் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த போலிச் செய்தியில் கீழே குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ''இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடத்தின் பரீட்சை வினாத்தாள் பாடத்திட்டத்திற்கு அப்பால் வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது, மேலும் வினா முறையும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக, விஞ்ஞானப் பாடத்திற்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் கூடுதலாக 08 மதிப்பெண்கள் வழங்கப்படும், மேலும் ஒவ்வொரு தேர்ச்சிக...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை உயர்த்த அமைச்சரவை அனுமதி!

Image
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை உயர்த்த அமைச்சரவை அனுமதி! அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS நிலையற்றவர்கள் என்ற சமூக பிரிவினருக்கான உதவித்தொகை கிடைக்கின்ற காலத்தை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இயலாமைக்குட்பட்டவர்கள் மற்றும் சிறுநீரக சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகையை 7,500 ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது. அதேநேரம், முதியவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகையை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

5 ஆம் ஆண்டு புலமை பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

Image
5 ஆம் ஆண்டு புலமை பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின! 2024ஆம் ஆண்டின் 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 6ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS அதன்படி, மாணவர்கள் இன்று (14) முதல் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தை பயன்படுத்தி தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளைச் சரிபார்க்கலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில் தகுதி பெற்ற பள்ளியைப் பெறாத அல்லது சரியான காரணங்களுக்காக இடமாற்றம் கோர விரும்பும் மாணவர்களுக்கு, மேல்முறையீடுகளை ஒன்லைனில் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேல்முறையீடுகளுக்கான காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள...

அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்து தீர்வுகளை பெற இலகுவான வழி!

Image
அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்து தீர்வுகளை பெற இலகுவான வழி! அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்து தீர்வுகளை பெறும் வழிமுறை குறித்து நலன்புரி நன்மைகள் சபையின் ஆணையாளரும், சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் தலைவருமான ஜயந்த விஜயரட்ண கருத்துத் தெரிவித்துள்ளார். (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS அதன்படி, '1924' என்ற இலக்கத்துக்கு வேலை நாட்களில் காலை 8.30 மணியிலிருந்து பி.ப. 4.30 மணிவரையில் தொடர்பு கொள்வதன் ஊடாக நலன்புரி நன்மைகள் சபையின் ஊடான அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை எவரும் முன்வைத்து தீர்வுகளை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டச் செயலர்கள், அனைத்துப் பிரதேச செயலர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்...

Grade-05 Scholarship Examination Re-Correction Results Released

Image
Grade-05 Scholarship Examination Re-Correction Results Released 2024 ஆம் ஆண்டுக்கான தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS பெறுபேறுகளை பார்வையிட இணையத்தளத்தை நாடவும். Check Results

GCE.O/L Exam Time Table 2024 (2025) – Department of Examinations

Image
GCE O/L EXAM TIME TABLE GCE.O/L Exam Time Table 2024 (2025) – Department of Examinations (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை 2024 (2025) - பரீட்சைகள் திணைக்களம் • Exam Date: 2025 March 17 - 26 Time Table

கிழக்கு புகையிரத மார்க்கங்களில் புதிய நடைமுறை

Image
புதிய நேரத்தில் சேவையை முன்னெடுக்கவுள்ள மீனகயா புகையிரதம்! கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் மீனகயா புகையிரதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் புதிய நேரத்தில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS வழக்கமாக இரவு 7 மணிக்குப் புறப்படும் புகையிரதம் வெள்ளிக்கிழமை முதல் இரவு 11 மணிக்குத் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. அடிக்கடி குறித்த புகையிரதத்தில் யானைகள் மோதுண்டு உயிரிழப்பது வழக்கமாக உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தைத் தொடருந்து திணைக்களம் எடுத்துள்ளது. மீனகயா நேர அட்டவணை ஏனைய இணைப்பு சேவைகளில் எது வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. எனவே புகையிரதத்தில் பயணிக்கும் பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு செயல்படுமாறு புகையிறத திணைக்களம் பொதுமக்களிடம் வேண்ட...